உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு

ஊத்தங்கரை திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு

ஊத்தங்கரை, ஊத்தங்கரையிலுள்ள தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் கடந்த, 2ம் தேதி முதல், தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. இரவில் மகாபாரத நாடக கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. நேற்று அர்ஜூனன் தபசு நாடகம் நடந்தது. ரெட்டிப்பட்டி கோவிந்தன் திருமலை நாடக சபா குழுவினர், நாடக கதைகளை மகாபாரத நிகழ்ச்சியாக எடுத்துக் கூறினர். நேற்று நடந்த அர்ஜூனன் தபசு நாடகத்தில் அர்ஜூனன் வேடமிட்டவர் பல்வேறு பூஜைகள் செய்து, இறுதியில் சிவ பூஜை செய்து, தபசு மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தது. அர்ஜூனன் தபசு மரம் ஏறி, மரத்தின் உச்சியில் சிவபூஜை செய்து, பூ, பழங்கள், விரலிமஞ்சள், பொரி கடலை போன்ற பூஜை பொருள்களை பக்தர்களுக்கு தபசு மரத்தின் மீதிருந்து வாரி இறைத்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களும், பெண்களும் பூஜை பொருள்களை மடியில் ஏந்தி பெற்றனர். பக்தர்களுக்கு பூஜை பொருள் கிடைத்தால் குடும்பம் செழித்து வளரும், குடும்பத்தோடு சிறப்பாக வாழ்வார்கள், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அர்ஜூனன் தபசு நாடகத்தை ஏராளமான பக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை