உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா

ஓசூர் அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா

ஓசூர்: ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கடந்த மாதம், 18ம் தேதி முதல், கடந்த, 7ம் தேதி வரை தொடர்ந்து, 20 நாட்கள் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. மொத்தம், 32 போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கலைத்திருவிழா நிறைவு விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். மூத்த பேராசிரியர்கள் கருணாநிதி, ஆர்த்தி, குமார் ஆகியோர் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, பாராட்டு சான்-றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மீனாபிரியா, உஷாராணி, பழனிசாமி, கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை