மேலும் செய்திகள்
கல்லுாரி கலை விழா
30-Sep-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், கடந்த மாதம், 16ம் தேதி முதல், 22ம் தேதி வரை முதல்-கட்டமாகவும், கடந்த, 2 நாட்கள், 2ம் கட்டமாகவும் கலைத்திரு-விழா நடந்தது. இப்போட்டிக்கு கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். கணிதத்துறை தலைவர் உமா, வரலாற்று துறைத்தலைவர் கனகலட்சுமி ஆகியோர், பொறுப்பாசிரியர்களாக போட்டிகளை நடத்தினர். இதில், தனி நடனம், குழு நடனம், என்பன உள்ளிட்ட, 32 போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில், 1,400 மாணவியர் கலந்து கொண்டனர். முதல் இடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
30-Sep-2025