உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு

அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா நிறைவு

கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் நடந்த கலைத்திருவிழா நிறைவு விழாவில், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், கடந்த மாதம், 16 முதல் கடந்த, 7 வரை கலைத்திருவிழா நடந்தது. இதில், பாரம்பரிய, மேற்கத்திய, நாட்டுப்புற நடனம், சிலம்பம், முகபாவங்கள் மற்றும் உடல் அசைவுகளை கொண்டு சைகை நாடகம், கிட்டார், வயலின், வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், மேளம், பறை, மிருதங்கம், தபேலா, பியானோ, ஹார்மோனியம், கீபோர்டு ஆகியவை வாசித்தல், போதை பொருள் தலைப்பை பற்றிய பாடல்வரிகளுக்கு இசையமைத்து பாடுதல், தமிழ், ஆங்கிலம் கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், நெருப்பை பயன்படுத்தாமல் உணவுகளை தயாரித்தல் உள்பட, 30 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 550 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டிக்கான நிறைவு விழா, அரசு ஆடவர் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. தாவரவியல் துறைத்தலைவர் ரவி வரவேற்றார். கல்லுாரிமுதல்வர் அனுராதா தலைமை வகித்தார். தமிழ் துறைத்தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் அறிக்கை வாசித்தார். வேதியியல் துறை இணை பேராசிரியர் வெங்கடாசலம், கலைத்திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தமிழ் துறை இணை பேராசிரியர் வெங்கடாசலம் நன்றி கூறினார். இதையொட்டி, மாணவ, மாணவியரின் நடனம், நாட்டியம் ஆகியவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ