உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முன்னாள் படை வீரர்களுக்கான ஓய்வூதியம் குறித்த விழிப்புணர்வு

முன்னாள் படை வீரர்களுக்கான ஓய்வூதியம் குறித்த விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், இன்று முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகள் உடனடியாக களைவது குறித்து, விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது.இதுதொடர்பான, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சரயு பேசியதாவது: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, எஸ்.வி.வி., திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகள் உடனடியாக களைவது குறித்து, ஸ்பார்ஷ் அவுட்ரீச் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் இன்று (6ம் தேதி) நடக்கிறது.சென்னை மண்டல பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டு இயக்குனர் தலைமையில் இன்று காலை, 9:00 முதல், 6:00 மணி வரை நடக்கிறது. முன்னாள் படைவீரர்கள், விதவையர் தங்களது ஓய்வூதிய பெறுதலில் உள்ள குறைபாடுகளை தெரிவித்து, உடனடியாக நிவர்த்தி செய்வது குறித்தும், ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டத்தில் உள்ள குறைபாடுகளையும், ஓய்வூதியம் குறைவாக பெறுபவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து பயன்பெறலாம். இவ்வாறு பேசினார்.சென்னை மண்டல பாதுகாப்பு கணக்குகளின் கட்டுபாட்டு இயக்குனர் ஜெயசீலன், துணை இயக்குனர் திலிப் குமார், முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குனர் கர்னல் (ஓய்வு) வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ