மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால விளையாட்டு
18-May-2025
கிருஷ்ணகிரி: உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த, மாநிலம் முழுவதும் மாணவ, மாணவியரை கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்த, தமிழ்நாடு விளை-யாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பிட் இந்தியா சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜ-கோபால் தலைமை வகித்தார். விழிப்புணர்வு சைக்கிள் பேர-ணியை, தீயணைப்புத்துறை ஆய்வாளர் ஆரோக்கியசாமி துவக்கி வைத்து பேசினார். இப்பேரணி, விளையாட்டு அரங்கில் துவங்கி, விஜய் வித்யாலயா பள்ளி வரை சென்று, மீண்டும் விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. இதில், 200 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மேலும், பயிற்றுனர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
18-May-2025