உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பணமோசடி குறித்து விழிப்புணர்வு பேரணி

பணமோசடி குறித்து விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அதிகரித்து வரும் பண மோசடி குற்றங்களை தடுக்கும் வகையில், சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி பகுதிகளில் சமீபகாலமாக பணத்தாசை காட்டி மோசடி செய்யும், இணைய வழி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பண இரட்டிப்பு, ஆன்லைனில் முதலீட்டுக்கு லாபம், லிங்க் கிளிக் செய்தால் ஊதியம் என பல்வேறு நுாதன முறைகளில் மோசடி நடக்கிறது. இதில் படித்த இளைஞர்கள், குறிப்பாக ஐ.டி., ஊழியர்கள் அதிகளவில் பணத்தை இழக்கின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் நேற்று மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பேரணியை துவக்கி வைத்தார் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., சங்கு முன்னிலை வகித்தார். புதிய பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய பேரணி, லண்டன்பேட்டை, பெங்களூரு சாலை தாசில்தார் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. சமூக வலைதள 'ஆப்'களில் வங்கி விவரங்களை தேவையில்லாமல் பகிர வேண்டாம். பணத்தாசை காட்டி வரும் தகவல்களை போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும். மொபைல் மூலம் வங்கி விவரம், ஓ.டி.பி., கேட்டால் தெரிவிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளுடன், 650க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை