உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூர் ஒன்றிய பஞ்., செயலர்கள் சங்க கூட்டம்

பர்கூர் ஒன்றிய பஞ்., செயலர்கள் சங்க கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திலுள்ள பஞ்., செயலா-ளர்கள் சங்க கூட்டம் மஜித்கொல்லஹள்ளி சமுதாயக் கூடத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பரசுராமன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் சங்கரன் தலைமை வகித்தார், மாநில அமைப்பு செய-லாளர் செங்கதிர் செல்வன் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மத்துார் ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் பேசினர். இதில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வரும், 24ல், சென்னையில் நடக்கவுள்ள தொடர் காத்திருப்பு போராட்டத்தில், பர்கூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பஞ்., செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்-டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை