உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., சிறப்பு கிராம சபை கூட்டம்

பா.ஜ., சிறப்பு கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதி வரட்டனப்-பள்ளியில், பா.ஜ., சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டார்.அப்போது, அவர் பேசியதாவது: இந்த மாவட்டத்தில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி, நவோதயா பள்ளிகள் தொடங்க கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதற்கு அனுமதி தர வேண்டியது முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவரோ, அனுமதி தர முடியாது என, உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கி உள்ளார். அந்த தடை விசாரணையில் உள்ளது. ஜவுளி பூங்கா உள்பட பல்-வேறு கோரிக்கை வைத்துள்ளீர்கள். நம் கூட்டணி ஆட்சி, தமிழ-கத்தில் வரும் போது, இந்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்-றப்படும். 30 மாதங்கள் கழித்து, மகளிர் உரிமை தொகை தந்துள்-ளார்கள். அதேபோல பொங்கல் பரிசு தொகை, கடந்தாண்டு தர-வில்லை. மக்களின் எதிர்ப்பை, தி.மு.க., சம்பாதித்துள்ளது. இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்து, வரும் சட்டசபை தேர்-தலில், தி.மு.க., குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை