பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூ
போச்சம்பள்ளி, நவ. 3-கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, குள்ளனுாரை சேர்ந்தவர் கருணாகரன், 40; இவரின் வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடியை வளர்த்து வருகிறார். அச்செடியில் நேற்று காலை, பிரம்ம கமலம் பூ பூத்து குலுங்கியது. கருணாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது வீட்டை சுத்தம் செய்து, புத்தாடை அணிந்து பக்தியுடன் பிரம்ம கமலம் பூவிற்கு சிறப்பு பூஜை செய்தனர். இதுகுறித்து கருணாகரன் கூறுகையில், ''கடவுள் பிரம்மாவிற்கே பூஜை செய்ததை போன்று எண்ணி, எங்கள் வீட்டில் பூத்த பிரம்ம கமலம் பூவுக்கு பூஜை செய்து வழிபட்டோம்,'' என்றார்.