உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அண்ணனை கொல்ல முயன்றதம்பிக்கு 7 ஆண்டு சிறை

அண்ணனை கொல்ல முயன்றதம்பிக்கு 7 ஆண்டு சிறை

அண்ணனை கொல்ல முயன்றதம்பிக்கு 7 ஆண்டு சிறைஓசூர்,: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த தேவன்தொட்டியை சேர்ந்தவர் மல்லேஷ், 53. இவரது அண்ணன் மாதவன். இருவருக்கும் சொத்து தகராறு இருந்தது. கடந்த 2016ல், ஏற்பட்ட தகராறில் மல்லேஷ், அண்ணன் மாதவனை கத்தியால் குத்தியதில், அவர் படுகாயமடைந்தார். கொலை முயற்சி வழக்குப்பதிந்த அஞ்செட்டி போலீசார் மல்லேஷை கைது செய்தனர்.இவ்வழக்கு தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மல்லேசுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரநாத் ஆஜராகினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி