உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டட தொழிலாளர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் நலவாரியம் அலுவலகம் முன்பு, ஏ.ஐ.டி.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில், நேற்று காலை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பூதட்டியப்பா, மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்ய சட்டத்தில் உள்ளபடி இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி வழங்க வேண்டும். வாரிய முறைப்படி ஓய்வூதியம் மாதம், 2,000 ரூபாய் வழங்க வேண்டும். மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வீடு மானியம், 4 லட்சம் ரூபாய் என்பதை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.வீட்டு வசதி திட்டத்தை துவக்கி, 3 ஆண்டுகள் கடந்தும் திட்டத்தை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 80 சதவீதம் வேலைகளை உள்ளூர் தொழிலாளர்களுக்கு கட்டாயம் வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். வேலை இடத்தில் விபத்தில் மரணமடையும், ஊனமடையும் தொழிலாளிக்கு இழப்பீட்டு சட்டப்படி முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ