உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கும்மனுாரில் எருது விடும் விழா; சீறிப்பாய்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள்

கும்மனுாரில் எருது விடும் விழா; சீறிப்பாய்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கும்மனுாரில் நடந்த எருது விடும் விழாவில், 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.கிருஷ்ணகிரி அடுத்த கும்மனுாரில், எட்டாம் ஆண்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. ஊர் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார். எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேப்பனஹள்ளி, திருப்பத்துார், வாணியம்பாடி, ஆம்பூர், ஓசூர், வேலுார், குப்பம், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 120 மீட்டர் இலக்கை குறைந்த நேரத்தில் எட்டிய காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக, 1 லட்சம் ரூபாய், இரண்டாவது பரிசாக, 75,000 ரூபாய், மூன்றாவது பரிசாக, 50,000 ரூபாய் என அடுத்தடுத்து, 82 பரிசுகள் வழங்கப்பட்டன. எருது விடும் விழாவை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். கிழக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை