மேலும் செய்திகள்
23ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
20-May-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்ட மீன் வளர்ப்பு விவசாயிகள், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்கள் மீன் பண்ணை அமைத்து, மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஒரு ஹெக்டேர் பரப்பளவு மீன் பண்ணைக்கு, 10,000 இளம் மீன் குஞ்சுகள் வீதம், 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 7 ஹெக்டேருக்கு மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கு உள்ளீட்டு மானியமாக வழங்கும் திட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் வரும், 20க்குள் விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, அரசு மீன் பண்ணை எதிரிலுள்ள மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், விபரம் பெற்று விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 04343 235745 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
20-May-2025