உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயம், மட்பாண்டம் தயாரிக்க மண் எடுக்க அழைப்பு

விவசாயம், மட்பாண்டம் தயாரிக்க மண் எடுக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரிகளிலிருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை விவசாயம், மட்பாண்டம் தயாரித்தல் ஆகியவற்றிற்கு இலவசமாக மண் எடுத்துச் செல்ல இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 1,037 ஏரிகளிஸ் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். மேலும், மட்பாண்ட தொழிலாளராக இருப்பின், தொடர்புடைய வி.ஏ.ஓ., அதை உறுதி செய்ய வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படும் இலவச வழங்கப்படும் வண்டல், களி மண் அளவுகளை பொருத்தவரை, நஞ்சை நிலத்தில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏக்கர் ஒன்றுக்கு, 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகள், புஞ்சை நிலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு, 90 கன மீட்டர் அ 30 டிராக்டர் லோடுகள் ஆகும். மேலும், மண்பாண்டம் தயாரிக்க, 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் எடுத்துக் கொள்ளலாம். உரிய விபரங்களுடன், தங்கள் விண்ணப்பித்தை, tnesevai.tn.gov.inஇணையதளம் வழியாக, தொடர்புடைய தாசில்தாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி