உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை மறியல் செய்த 41 பேர் மீது வழக்கு

சாலை மறியல் செய்த 41 பேர் மீது வழக்கு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே உள்ள கூசப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானமடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக, லட்சுமணன், கணேசன், பவுனேசன், ராஜேந்திரன், ரத்தினம்மா, முனிராஜ், சேட்டு, குமார், லட்சுமி, சகுந்தலா, ருக்கு உட்பட மொத்தம், 41 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி