மேலும் செய்திகள்
அனுமதியின்றி எருது விழா10 பேர் மீது வழக்கு பதிவு
12-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த கல்லுக்குறுக்கி மற்றும் பர்கூர், பூமாலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து கல்லுக்குறுக்கியில் எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த குருசாமி, 45, மற்றும் நால்வர் மீது மகாராஜகடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல பர்கூரில் எருது விடும் விழா நடத்தியதாக மகேந்திரன், 55, மற்றும் நால்வர் மீது பர்கூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
12-Apr-2025