உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காரில் குட்கா கடத்தல் இருவர் மீது வழக்கு

காரில் குட்கா கடத்தல் இருவர் மீது வழக்கு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் போலீசார், தனியார் டயர் ேஷாரூம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த ஹூண்டாய் வெர்னா காரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது.இதனால், 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 157 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 2,850 ரூபாய் மதிப்புள்ள, 30 பாக்கெட் கர்நாடகா மாநில மதுபானம், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே அத்திப்பட்டணம் பாத்திமா நகரை சேர்ந்த சாகுல் ஹமீத், 38, அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாய் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி