பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த குந்தப்பள்ளியை சேர்ந்தவர் நந்தகுமார், 40, அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் டவுன் பஸ்சை ஓட்டி சென்றுள்ளார்.சூளகிரி ரவுண்டானா அருகே சென்றபோது, முன்னாள் சென்ற ஆட்டோ மீது பஸ் உரசியது.இதனால் பஸ் டிரைவருக்கும், ஆட்டோ டிரைவர் ஜான்சன் என்பவருக்கும், தகராறு ஏற்பட்டது.அப்போது, நந்தகுமாரை, ஆட்டோ டிரைவர் ஜான்சன் சரமாரியாக தாக்கினார். காயமடைந்த நந்தகுமார் புகார் படி, சூளகிரி போலீசார் ஜான்சன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.