உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜாதிவாரி கணக்கெடுப்பால் வறுமை நீங்க போவதில்லை

ஜாதிவாரி கணக்கெடுப்பால் வறுமை நீங்க போவதில்லை

ஓசூர்: ''தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பால் வறுமை நீங்கி விட போவதில்லை,'' என, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில், வால்மீகி ஜனசேனா நலச்சங்கம் சார்பில், மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில், பேரணி மற்றும் மாநாடு நடந்தது. வால்மீகி ஜெயந்திக்கு, அரசு விடுமுறை வழங்க வேண்டும். வால்மீகி மக்களை பட்டியல் பிரிவில் உடனடியாக சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற, தமிழக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எந்த வறுமையும் நீங்கி விட போவதில்லை. மாறாக, ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள அரசு அதிகாரிகள், உயர் பதவி வகிப்பவர்கள், பொருளாதார நிலைகள் ஆகியவற்றை கணக்கெடுக்க வேண்டும். அந்தந்த ஜாதியில் எவ்வளவு ஏழைகள் இருக்கிறார்கள், எவ்வளவு உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எவ்வளவு பேர் ஐ.ஏ.எஸ்., --ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கிறார்கள். அரசு வேலைகளில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைகள் ஆகியவற்றின் புள்ளி விபரங்களை சேர்த்து எடுக்க வேண்டும். எந்த சமூகத்தில் இதுபோன்ற சமநிலை கிடைக்கவில்லையோ, அந்த சமூகத்திற்கு இது கிடைத்தாக வேண்டும். அதனுடைய நோக்கம் தான் இந்த மாநாடு.இவ்வாறு, அவர் கூறினார்.வால்மீகி ஜனசேனா நலச்சங்க மாநில செயலாளர் லகுமா நாயுடு, பொருளாளர் மாதேஷ் நாயக், கர்நாடகாவை சேர்ந்த பிரம்மானந்த சுவாமிஜி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி