அரசு பள்ளிக்கு டேபிள், டெஸ்க் வழங்கும் விழா
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 28வது வார்டுக்கு உட்பட்ட சானசந்திரம் வ.உ.சி., நகரில், மாநகராட்சி துவக்கப்பள்ளி இயங்குகிறது. இப்-பள்ளிக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் சமூக பொறுப்புணர்வு நிதியில் (சி.எஸ்.ஆர்.,) இருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவ, மாணவியருக்கு டேபிள், டெஸ்க் வாங்கப்பட்டுள்ளது. இதை பள்ளியில் ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் தலைமை வகித்து மாணவ, மாணவியருக்கு டேபிள், டெஸ்க் ஆகியவற்றை வழங்கினர். கோவை பஞ்சாப் நேஷனல் வங்கி துணை பொது மேலாளர் மீராபாய், கவுன்சிலர்கள் சசிதேவ், தேவி மாதேஷ் உட்-பட பலர் பங்கேற்றனர்.