மாற்றுத்திறனாளிகளுக்கான முதல்வர் கோப்பை போட்டி
கிருஷ்ணகிரி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கும், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்-டுகள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த, 10ல், பள்ளி மாணவ, மாணவியருக்கும், 16ல் கல்லுாரி மாணவ, மாணவியருக்கும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில், உடல் ஊனமுற்றவர்களுக்கு, தடகளம், பேட்-மிட்டன், வீல்சேர், டேபிள் டென்னிஸ், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், கண் பார்வையற்றவர்களுக்கு, 100 மீ., ஓட்டம், குண்டு எறிதல், அடால்ட் வாலிபால் ஆகிய போட்டிகளும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு தடகளம், பந்து எறிதல் போட்டிகளும், காது கேளாதவர்களுக்கு தடகளம், கபடி போட்டி-களும் நடந்தன. விளையாட்டு போட்டிகளை மாற்றுத்திறனா-ளிகள் நல அலுவலர் முருகேசன் துவக்கி வைத்தார். இதில், 525க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். போட்டி ஏற்பாடுகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் செய்திருந்தார். பரணி பள்ளி தாளாளர் சேகர், எம்.ஜி.எம்., பள்ளி நிறுவனர் பன்னீர், சி.இ.ஓ.,வின் முன்னாள் நேர்முக உதவியாளர் முனுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.