ஆதரவற்றோருக்கு வழங்க கிறிஸ்துமஸ் கேக்
ஓசூர்: ஆதரவற்ற பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்க-ளுக்கு வழங்க, ஓசூர், பத்தலப்பள்ளி அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில், 100 கிலோ கிறிஸ்துமஸ் பிளம் கேக் மிக்சிங் செய்யும் திருவிழா நடந்தது. இதில், ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர் சந்-தானபிள்ளை, நிர்வாக இயக்குனர் சேன் ஜார்ஜ் ஆரோக்கிய ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியை துவக்கினர்.உலர் பழங்கள் மீது ஒயின், பழ ரசங்கள் ஊற்றப்பட்டன. அவற்றை ஒரு மாதம் வரை, நன்றாக ஊற வைத்த பின், கிறிஸ்-துமஸ் கேக் தயாரிக்கப்படும் என, தலைமை சமையல் கலை நிபுணர் ஈஸ்வரதாசன் கூறினார். தனியார் ஓட்டல் பொது மேலாளர் அமித்குமார் ஸ்ரீவஸ்தவா, சி.இ.ஓ., குளோரி பிந்து உட்-பட பலர் பங்கேற்றனர்.