உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எண்ணெய் வித்து பயிர் உற்பத்தி அறிய சூளகிரி விவசாயிகள் பட்டறிவு பயணம்

எண்ணெய் வித்து பயிர் உற்பத்தி அறிய சூளகிரி விவசாயிகள் பட்டறிவு பயணம்

கிருஷ்ணகிரி, நவ. 1-தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட, திண்டிவனம் வேளாண் அறிவியல் மையத்திற்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரத்தில் இருந்து, 50 விவசாயிகளை பட்டறிவு பயணமாக அழைத்து செல்லப்பட்டனர். இது குறித்து, வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:நிலக்கடலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், நிலக்கடலையுடன் ஊடுபயிராக, 40,000 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் ஆமணக்கு பயிரிடப்படுகிறது. புதிய விதை தொழில்நுட்பம் மற்றும் எண்ணெய் வித்துக்களில், கடுகு, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி போன்றவை, சமையல் எண்ணெய் உற்பத்தி செய்ய பயன்படுத்தக்கூடிய பயிர்கள். இவைகளுக்கு சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிக தேவை உள்ளது. எண்ணெய் வித்துக்களை பயிரிட புதிய விதை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டால், அது பெரிய அளவில் உற்பத்தியை அதிகரிக்க உதவும். எண்ணெய் வித்துக்கள், குறிப்பாக கடுகு பயிரிடுவதன் மூலம், விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை வழங்க முடியும். இந்தியாவில் பயிரிடப்படும், 8 மில்லியன் ஹெக்டேர் கடுகில், 50 சதவீத விவசாயிகள், கலப்பினங்களில், பாதிக்கும் குறைவான ரகங்களையே பயிரிடுகின்றனர். இதனால், புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள, விவசாயிகள் திண்டிவனம் வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு, அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி