உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.32 லட்சத்தில் வகுப்பறைகள் திறப்பு

ரூ.32 லட்சத்தில் வகுப்பறைகள் திறப்பு

ஓசூர், டிச. 24-தளி ஒன்றியம், கெம்பட்டி பஞ்., உட்பட்ட கொர்னுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் பின், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் வகுப்பறைகளை பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, பஞ்., தலைவர் கெம்பன்னா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சந்திரப்பா, பேலகொண்டப்பள்ளி பஞ்., தலைவர் எல்லப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை