சாலை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் உத்தரவால் ஜரூர்
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வலசகவுண்டனுார் பஞ்.,க்கு உட்பட்ட கூச்சானுார் மோட்டூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்த மண் சாலையை, சிமென்ட் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், பட்டா நிலத்தில் உள்ளது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணையில், சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்கு நிலம் என்பதால், சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.இதை கண்டித்து, கடந்த, 27-ல் தனி நபர் குடும்பத்தார், சாலை மறியல் செய்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, நேற்று மீண்டும் கூச்சானுார் மோட்டூர் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.