மேலும் செய்திகள்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு
13-Mar-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்-கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், முது-கலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான முதலாமாண்டு துவக்க விழா நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கில் நடந்தது.மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அறக்கட்டளை நிறுவனர் தம்பிதுரை எம்.பி., மற்றும் தலைவர் பானுமதி தம்பிதுரை, செய-லாளர் லாசியா தம்பிதுரை, அறங்காவலர் நம்ரதா தம்பிதுரை ஆகியோர் தலைமை வகித்து, முதுகலை மருத்துவ படிப்பு முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு, மருத்துவம் சார்ந்த அறிவுரைகளை வழங்கி பேசினர். கல்லுாரி டீன் ராஜா முத்தையா, துணை முதல்வர் ஆனந்தரெட்டி, மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஷ் ஓங்கல், இருப்பிட மருத்துவர் பார்வதி, அதியமான் கல்வி குழும இயக்-குனர் ரங்கநாத், மேலாளர் நாராயணன், வேளாங்கண்ணி பள்-ளிகள் குழும அறங்காவலர் சுரேஷ்பாபு, தாளாளர் கூத்தரசன் உட்-பட பலர் பங்கேற்றனர்.
13-Mar-2025