மேலும் செய்திகள்
ரூ.48.33 லட்சத்தில் வளர்ச்சி பணி
27-Sep-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி ஜக்கப்பன் நகர் 6வது தெருவில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்-டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. அதே போல், கிருஷ்ணகிரி, 28வது வார்டு மசால்கார தெருவில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இப்பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் கேசவன், இளைஞரணி நகர செய-லாளர் சரவணன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாஜலம், நகர துணை செய-லாளர் குரு, கவுன்சிலர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Sep-2024