உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரயில்வேயில் வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி புகார்

ரயில்வேயில் வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி புகார்

ரயில்வேயில் வேலை எனக்கூறிரூ.12 லட்சம் மோசடி புகார்கிருஷ்ணகிரி, நவ. 7-கிருஷ்ணகிரி அருகே, ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, 12 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், பாலகுறியை சேர்ந்தவர் ஜலபதி, 50. அவரை, கடந்த பிப்., 10 ல் கிருஷ்ணகிரி அருகே தின்னகழனி ராகவன், வாணியம்பாடி அருகே செட்டியப்பனுார் ராமச்சந்திரன், மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரம் உத்தரவேல் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவரிடம், 'உங்கள் மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறோம்' எனக்கூறி, 12 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டனர். சில நாட்களுக்கு பின், பணியாணை, அடையாள அட்டை ஆகியவற்றை, ரயில்வே லோகோவுடன் வழங்கினர். அதன்பின், அது போலி பணி நியமன ஆணை என தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜலபதி, நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி