உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மன்மோகன் சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் மலர் அஞ்சலி

மன்மோகன் சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் மலர் அஞ்சலி

கிருஷ்ணகிரி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் இரவு காலமானார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகர காங்., கமிட்டி சார்பில், முன்னாள் நகர காங்., தலைவர் தவமணி தலை-மையில், மன்மோகன் சிங் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி அடுத்த வெண்ணம்-பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், காங்., கட்சி மாவட்ட துணைத் தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான சேகர் தலைமையில், தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வம், வர-லாற்று ஆசிரியர் முனிராஜ் மற்றும் மாணவ, மாணவியர், மன்மோன் சிங் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், ஓசூர் எம்.ஜி., ரோட்டில் உள்ள காந்தி சிலை முன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நேற்று காலை அஞ்சலி செலுத்தப்-பட்டது. மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில், மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மைஜா அக்பர், மாவட்ட மகளிரணி தலைவி சரோ-ஜம்மா மற்றும் கட்சியினர், மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை