உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., ஆட்சி முடிவுக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் மாநில பா.ஜ., தலைவர் நாகேந்திரன் ‍பேச்சு

தி.மு.க., ஆட்சி முடிவுக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் மாநில பா.ஜ., தலைவர் நாகேந்திரன் ‍பேச்சு

திருப்பத்துார்: ''தி.மு.க., ஆட்சி முடிவுக்கு, 'கவுண்டவுன் ஸ்டார்ட்' ஆகிவிட்டது,'' என, பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் பேசினார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில், 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' என்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:முஸ்லிம் மக்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் என, பிரித்தாளும் சூழ்ச்சியில், தி.மு.க., முனைந்துள்ளது. இன்று தோல்வி பயம். 'சார்' என்றால், தி.மு.க.,விற்கு பயம். எல்லாம் உங்களுக்கு தெரியும். கொளத்துார் சட்ட சபை தொகு-தியில், 9,000 போலி வாக்காளர்கள் உள்ளனர். இதை கண்டுபிடித்தால் முதல்வருக்கு அவமானமாகி விடும் என அலறுகிறார்கள். 23 ஆண்டுகளுக்கு பிறகு போலி வாக்கா-ளர்கள் கணக்கெடுப்பு எடுக்க உள்ளனர். ஏன் உங்களுக்கு பயம்.உங்கள் ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள்தான் இதில் ஈடுபட உள்ளனர். தி.மு.க.,விற்கு தோல்வி பயம் வந்துவிட்-டது. நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள், அனைத்து கட்சி கூட்டம் கூட்டுகிறார்கள். தி.மு.க., ஆட்சி முடிவுக்கு, 'கவுண்டவுன் ஸ்டார்ட்' ஆகிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை