உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்சாரம் தாக்கி தம்பதி பலி

மின்சாரம் தாக்கி தம்பதி பலி

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கொத்-துாரை சேர்ந்தவர் நாராயணப்பா, 46. சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் மனைவி ரேணுகா, 43. இவர்களுக்கு, ஹர்ஷிதா, 19, என்ற மகள், சீனிவாசன், 17, என்ற மகன் உள்ளனர்.ஓசூர் அருகே பூனப்பள்ளியில் குடும்பத்துடன் தங்கியிருந்தனர். நேற்று மாலை தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஹர்ஷிதா, பெற்றோர் வீட்டில் இல்லாததால், மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு பெற்றோர் இருவரும் சலனமற்று கீழே விழுந்து கிடந்தனர். ஹர்ஷிதா சத்தம் போடவே, அக்கம் பக்கத்-தினர் வந்து பார்த்தனர். அப்போது, தம்பதி இருவரும், வீட்டிற்கு வரும் ஒயரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி பலியா-னது தெரிந்தது. மத்திகிரி போலீசார் நேற்றிரவு சடலத்தை மீட்டனர். விசாரணையில், மாடிக்கு சென்ற நாராயணப்பா, முதலில் மின்சாரம் தாக்கி கீழே விழவே, கணவரை காப்பாற்ற சென்ற மனைவி ரேணுகா, அவரை தொட்டதால், அவரையும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை