சி.பி.ஐ. எம்., கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட அரசம்பட்டி, பாரூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நீண்-டநாட்களாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்க கோரியும், அதேபோல் வீட்டுமனை இல்லாதவர்க-ளுக்கு, வீட்டு மனையுடன் கூடிய பட்டா வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ. எம்., கட்சியினர் நேற்று, 40க்கும் மேற்பட்டோர் போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் முன் கோஷம் எழுப்பி காத்-திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட செயலாளர் சாமு, மாவட்ட செயலாளர் சுரேஷ், கடல்வேந்தன் உள்ளிட்ட நிர்வா-கிகள் கலந்து கொண்டனர்.