உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானைகளால் பயிர்கள் நாசம்

யானைகளால் பயிர்கள் நாசம்

யானைகளால் பயிர்கள் நாசம்ஓசூர், அக். 1-தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலஹள்ளி வனப்பகுதியில், 2 யானைகள் தனியாக முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், ஆலஹள்ளி கிராமத்திற்கு அருகே பயிரிடப்பட்டிருந்த வாழை, ராகி போன்ற பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. விவசாய நிலங்களில் இருந்த தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தின. தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். விவசாய பயிர்களை யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ