மேலும் செய்திகள்
ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் பயணம்
31-Oct-2024
கிருஷ்ணகிரி: தீபாவளி பண்டிகையின் தொடர், 4 நாள் விடுமுறையில், வெளி-யூர்களில் பணியாற்றியவர்கள், படித்து கொண்டிருந்தவர்கள், சொந்த ஊர் வந்து, தீபாவளியை கொண்டாடினர். நேற்று, 4 நாள் விடுமுறை முடிந்த நிலையில், பணி செய்யும் இடங்களுக்கும், படிக்கும் இடங்களுக்கும் அவர்கள் திரும்பினர். இதனால் கிருஷ்-ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடமின்றி பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர். சில பஸ்களில் படிக்கட்டில் நின்று கொண்டும் பயணம் செய்தனர். இரவில், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
31-Oct-2024