உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா

ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராஜகணபதி நகரிலுள்ள வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நன்மைக்காகவும், நாடு நலம் பெறவும் ஆங்கில புத்தாண்டு தினத்தில், கடலைக்காய் திருவிழா நடத்தப்படுகிறது.இதையொட்டி, 66ம் ஆண்டு கடலைக்காய் திருவிழா, ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று முன் தினம் அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 10:00 மணிக்கு, கடலைக்காய்க்கு சிறப்பு பூஜை நடந்தது.ஏராளமான பக்தர்கள், கடலைக்காய்களை கோவில் கோபுரம் மீது வீசி ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோபுரம் மீது வீசப்பட்டு, கீழே விழுந்த கடலைக்காய்களை பக்தர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். பக்தர்களுக்கு கடலைக்காய் பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !