உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெஞ்சல் புயல் மழையால் நிரம்பி வரும் அணைகள்

பெஞ்சல் புயல் மழையால் நிரம்பி வரும் அணைகள்

தர்மபுரி, டிச. 4-பெஞ்சல் புயல் காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் வரட்டாறு, வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, நாகாவதி, கேசர்குளி அணைகள் மற்றும் ஈச்சம்பாடி அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், 34.50 அடி உயரம் கொண்ட வரட்டாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு நேற்று வினாடிக்கு, 2,125 கன அடி நீர்வரத்து இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, 2,125 கன அடி நீரும் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது.இதேபோல், 65.27 அடி உயர வாணியாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம், 63.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,125 அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், இது முழுவதும் அணையிலிருந்து வாணியாற்றில் திறந்து விடப்பட்டது.மேலும், 50.18 கொண்ட தொப்பையாறு அணை நீர்மட்டம், 48 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,200 கன அடியாக நீர்வரத்து இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தொப்பையாற்றில் வினாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 50 அடி உயர சின்னாறு அணை நீர்மட்டம், 41.98 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 598 கன அடி நீர்வரத்து இருந்தது. 25.26 அடி உயர கேசர்குளி அணையில் தற்போது, 16.40 அடி தண்ணீர் உள்ளது. 24.60 அடி உயர நாகாவதி அணையில் தற்போது, 7.71 அடி நீர் இருப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை