கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவுகிருஷ்ணகிரி, அக். 27-காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து, 6,250 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை, 4,222 கன அடியாக சரிந்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில் நீர்மட்டம், 50.25 அடியாக உள்ளது.அணையிலிருந்து வினாடிக்கு, 4,036 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், பூங்காவிற்கு செல்லும் சாலை அடைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.பி., அணைக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் வரை, 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, 11-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.