உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டி முடித்து பூட்டி கிடக்கும் நலவாழ்வு மையங்கள் பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம்

கட்டி முடித்து பூட்டி கிடக்கும் நலவாழ்வு மையங்கள் பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம்

சேலம்: தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பல மாதங்களாகியும், பயன்பாட்-டுக்கு வராமல் பூட்டி கிடக்கின்றன. தமிழகத்தில் தேசிய நகர்ப்புற சுகாதார குழுமத்தின் மூலம், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்-பட்டது. இதில் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில், 140, கோவையில், 50, மதுரை, 46, திருச்சி, சேலம், திருப்பூரில் தலா, 25, நகர பகுதிகளில், 189 என 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 2023 ஜூன், 6ல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன. ஒவ்வொரு மையத்துக்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு துணை பணியாளர் வீதம், நான்கு பணி-யிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டி முடித்து ஓராண்டாகிவிட்-டது. சேலம் மாநகராட்சியில், ஏழு நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மருத்துவ பணியிடங்க-ளுக்கு, சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைக்கப்-பட்டுள்ளதால், பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளன. இதனால், புதிய கட்டடங்கள் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.இதுகுறித்து, சுகாதார அலுவலர் ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு திட்டத்தின் கீழ், நகர்ப்புறத்தில் நலவாழ்வு மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு செவி-லியர் பணியிடத்துக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதை தமிழக அரசு, மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், துணை அலு-வலர் என நான்கு பணியிடங்கள் கொண்ட நலவாழ்வு மையமாக அறிவித்துள்ளது. இவர்களுக்கான சம்பளத்தை தமிழக அரசு ஏற்க வேண்டியிருக்கும்.இரண்டாம் கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட, 208 நகர்ப்புற நல-வாழ்வு மையங்களுக்கும், நிதிச்சுமை காரணமாக பணியிடங்க-ளுக்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால், கட்டி முடிக்-கப்பட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை