மேலும் செய்திகள்
1.54 லட்சம் குடும்பத்திற்கு புது ரேஷன் கார்டு
08-Dec-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய ரேஷன்கார்டுகள் மற்றும் நகல் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு மேலாகியும் கார்டு வரவில்லை. இதனால், குடிமை பொருள் அலுவலகத்திற்கு மக்கள் நடையாய் நடந்து வருகின்றனர்.தமிழக - கர்நாடகா - ஆந்திரா என மூன்று மாநில எல்லையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, இந்தி என பன்மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் மொத்தம், 5 லட்சத்து, 69,575 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை போன்ற பல்வேறு வகையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம், 19 லட்சத்து, 6,807 பேர் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கார்டுகள் தொலைந்து போனவர்கள், பெயர், முகவரி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, ரேஷன் கார்களில் திருத்தம் செய்த கார்டுதாரர்கள், புதிய நகல் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசின் மூலம், 50 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.அதேபோல், புதிய ரேஷன் கார்டு கேட்டும் பொதுமக்கள் விண்ணப்பிக்கின்றனர். இவையெல்லாம், சென்னை குடிமை பொருள் வழங்கல் கமிஷனர் அலுவலகத்தில் பிரிண்டிங் செய்யப்பட்டு, அந்தந்த மாவட்டத்திற்கு மொத்தமாக அனுப்பப்பட்டு, அங்கிருந்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நகல் கார்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு, வீட்டின் முகவரிக்கே தபால் மூலமாக ரேஷன் கார்டுகள் அனுப்பி வைக்கப்படும் என, குடிமை பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகல் கார்டு கேட்டு விண்ணப்பித்த மக்களுக்கு, நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. அதேபோல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டு கிடைக்க காலதாமதமாகி வருகிறது. இதனால் அந்தந்த தாலுகா குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் அலுவலகத்திற்கு மக்கள் நடையாய் நடந்து வருகின்றனர்.இது குறித்து, குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாநிலம் முழுவதும் ஒரே இடத்தில் பிரிண்டிங் செய்யப்படுகிறது. புதிய மற்றும் நகல் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புதிய கார்டு மற்றும் நகல் கார்டுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, அதன் பின் பிரிண்டிங் செய்கின்றனர். அதனால் காலதாமதமாகிறது' என்றனர்.
08-Dec-2024