மேலும் செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம்
11-Jun-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பாக, தேசிய பேரிடர் மேலாண்மை செயல் விளக்கம் நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் முனைவர் பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சக்திவேல், யசோதா முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பொறுப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்ந்த செயல் விளக்க வகுப்பு நடந்தது. தீ மற்றும் காஸ் விபத்திலிருந்து பாதுகாத்து கொள்ளுதல், மாடியில் இருப்பவர்களை, விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பது, சி.பி.ஆர்., பயிற்சி உள்பட பல்வேறு பேரிடர் மேலாண்மை பற்றிய செயல் விளக்கம் தரப்பட்டது.
11-Jun-2025