உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், பா.ம.க., சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர செயலர்கள் நித்திஷ்குமார், பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலர் மோகன்ராம், வேலு உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில்,' நகரில் உள்ள நடைபாதையை பெரும்பாலான வணிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால், விபத்தில் சிக்குகின்றனர். பொதுமக்கள் நடப்பதற்கு மட்டுமே நடைபாதை பயன்படுத்த வேண்டும். ஆனால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.நகரின் அனைத்து பகுதிகளிலும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கிடைக்கிறது. பல கடைகளில் லாட்டரி விற்பனை நடக்கிறது. இதையும் நகராட்சியினர் கண்டு கொள்வதில்லை' என்றனர். ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை