உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துணை முதல்வர் உதயநிதி வருகை; சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

துணை முதல்வர் உதயநிதி வருகை; சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிக்கு வருகை தரும், துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என, தி.மு.க., கூட்-டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரியில், நேற்று நகர தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலர் நவாப் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும், நகராட்சி தலைவருமான பரிதா நவாப் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி கிருஷ்ணகிரி வருகையின்போது, 33 வார்டுகளிலும் புதிய கொடி கம்பங்கள் நிறுவி கொடியேற்ற மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., அதிகாரியிடம் அனுமதி பெற்று தர வேண்டும். கிருஷ்ணகிரி அண்ணாதுரை சிலையை சுற்றி பூங்கா நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்ட நிலையில் அதை திறந்து வைக்க வேண்டும். ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்த கருணாநிதி சிலை அருகில் அமைக்கப்படவுள்ள கொடி கம்-பத்தில் தி.மு.க., கொடியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர தி.மு.க., பொருளாளர் கனல் சுப்பிரமணி, மீனா நடராஜன், நகராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை