உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தில் ரூ.1.92 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி

காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தில் ரூ.1.92 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி

கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் பெண்ணேஸ்வரமடம் பஞ்.,ல், 47.21 லட்சம் ரூபாய், அகரம் பஞ்.,ல், 46.81 லட்சம் ரூபாய், எருமாம்பட்டி பஞ்.,ல், 48.67 லட்சம் ரூபாய், தளிஹள்ளி பஞ்.,ல், 49.50 லட்சம் ரூபாய் என மொத்தம், 1.92 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, திட்டப்பணிகளை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து நாகோஜனஹள்ளி டவுன் பஞ்.,க்கு உட்பட்ட 3, 4, 5வது வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். பின், வேலம்பட்டியில், 69 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை மற்றும் என்.தட்டக்கல்லில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.காவேரிப்பட்டணம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நாகோஜனஹள்ளி டவுன் பஞ்., தலைவர் தம்பிதுரை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை