உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வட்டிகானப்பள்ளியில் மாநில கிரிக்கெட் போட்டி

வட்டிகானப்பள்ளியில் மாநில கிரிக்கெட் போட்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த வட்டிகானப்பள்ளியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி வரும் 10ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக, ஒர லட்சத்து, ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி அடுத்த வட்டிகானப்பள்ளி காந்திஜி கிரிக்கெட் கிளப் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடக்கிறது. போட்டிகள் வரும் 10ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கிறது. போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு, ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு 25 ஆயிரம் ரூபாயும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும், ஐந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு 5,000 ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் நுழைவு கட்டணமாக வரும் 8ம் தேதிக்குள் 4,500 ரூபாய் செலுத்த வேண்டும். போட்டிகள் டென்னீஸ் பந்தில் நடக்கும். அணிகளின் பெயரை பதிவு செய்ய விரும்புவோர் அப்பாதுரை, மொபைல்ஃபோன் 93600-81340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை