உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தீயணைப்பு துறை செயல் விளக்கம்

தீயணைப்பு துறை செயல் விளக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணையில் தீயணைப்பு துறையின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல் விளக்கம் நடந்தது. வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கம் கிருஷ்ணகிரி தீயணைப்பு கோட்ட அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணையில் நடத்தப்பட்டது.இதில், வெள்ளத்தில் அடித்து செல்லும் போது பொதுமக்களை ஏணி மூலம் மீட்பது, படகு மூலம் மீட்பது, கயிறு மூலம் மீட்பது போன்ற செயல் முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை