உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக்கில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

கிருஷ்ணகிரி: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த கனமந்தூரை சேர்ந்தவர் அமுல்ராஜ் (32). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது நண்பர் பிரான்சிஸ். இவர்கள் இருவரும் நேற்று காலை ஓசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் வந்துவிட்டு பின்பு திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பகல் 11 மணிக்கு பர்கூர் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க பைக்கை ஓட்டி சென்ற பிரான்சிஸ் திடீரென்று பிரேக் போட்டுள்ளார். அப்போது, பின்னால் அமர்ந்திருந்த அமுல்ராஜ் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அமுல்ராஜ் இறந்தார். பர்கூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ