உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாற்றுத்திறனாளி, மாணவன் மாயம்

மாற்றுத்திறனாளி, மாணவன் மாயம்

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே அத்திமரத்துார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 40. அரசு ஆண்கள் விடுதி காப்பாளர்; இவரது மகன் மகன் பிரதீப், 19, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார்; நேற்று முன்தினம் காலை கல்லுாரியிலிருந்து வெளியே சென்றவர், வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். அவரது தந்தை புகார்படி, மத்திகிரி போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.* கெலமங்கலம் அருகே காருகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 61. கூலித்தொழிலாளி; காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த, 40 ஆண்டுக-ளாக அப்பகுதியில் உள்ள வெங்கடேஷ் என்பவ-ரது வீட்டில் வேலை செய்து வந்தார்; கடந்த, 15ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. வெங்கடேஷ் புகார்படி, கெலமங்-கலம் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை தேடி வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை