மேலும் செய்திகள்
தென்னங்கன்று உற்பத்திக்கு 60 புதிய பண்ணை
28-Sep-2024
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
18-Sep-2024
கி.கிரியில் பொதுமக்களுக்குதென்னங்கன்று வழங்கல்கிருஷ்ணகிரி, அக். 10-கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், பா.ம.க., தலைவர் அன்புமணியின், 56வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் பூபதி, நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், அன்புமணியின் பிறந்த நாளையொட்டி, மாவட்ட செயலாளர், பா.ம.க., கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 756 மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், நேற்று, 108 தென்னங்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, அன்புமணியின் பெயரில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சூளகிரி அரசு மருத்துவமனையில், 56 பேர் ரத்த தானம் செய்தனர். மேலும் உத்தனப்பள்ளியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், பா.ம.க.,வில் இணைந்தனர். மாவட்ட துணை செயலாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
28-Sep-2024
18-Sep-2024