மேலும் செய்திகள்
ரூ.37 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் துவக்கம்
14-Nov-2024
ஓசூர்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், காமராஜ் காலனியிலுள்ள மாநக-ராட்சி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நேற்று நடந்தது.ஓசூர், தேன்கனிக்கோட்டை, குருபரப்பள்ளி, மாடரஹள்ளி, மத்துார், பேகேப்பள்ளி, மல்லப்பாடி உட்பட மொத்தம், 12 அணிகள் பங்கேற்றன. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., போட்டிகளை துவக்கி வைத்தார்.இதில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், மாநகர அவைத்தலைவர் செந்தில், தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-Nov-2024